tamilnadu

img

விவசாயிகள் கண்ணில் சுண்ணாம்பு கார்ப்பரேட் கண்ணில் வெண்ணெய்

கே.பாலகிருஷ்ணன் சாடல்

தஞ்சாவூர், செப்.22- மத்தியில் உள்ள மோடி அரசு விவசாயிகள் கண்ணில் சுண்ணாம்பையும், கார்ப்பரேட் கண்ணில் வெண்ணெய்யையும் தடவுவதாக கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் இராயமுண்டான்பட்டியில் மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 42-ஆம்  ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கிளைச் செயலாளர்கள் கே.ரமேஷ், ஆர்.கே.பெரியசாமி, ஆர்.தீபன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், வடக்கு கே.காந்தி, தஞ்சை எம்.மாலதி, திருவை யாறு ஏ.ராஜா, தஞ்சை மாநகரச் செயலாளர் என். குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் சிபிஎம் தஞ்சை மாவட்ட செய லாளர் கோ. நீலமேகம், மாநிலக்குழு உறுப் பினர் என்.சீனிவாசன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பேசுகை‌யி‌ல்,” நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலப் பகிர்வு வழங்கிய பெருமை செங்கொடி இயக்கத்திற்கு உண்டு. விவசாயத் தொழிலாளர்கள் தலை நிமிர காரணமான இயக்கம் செங்கொடி இயக்கம். 

நுண் கடன் நிதி நிறுவனங்களால் பெண்கள் கடன்பட்டு, அவர்கள் வாழ்வு சிக்கி சீரழியும்  நிலை ஏற்பட்டுள்ளது. நுண் கடன் நிதி நிறு வனத்தால் கடன் பெற்றவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப் பட்டுள்ளனர். பத்து வருட காலமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி, வெள்ளம், புயல் என பல சீரழிவுக்கு ஆளாகி  விவசாயி சின்னாபின்னமாகி விட்டான். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவார ணம் தருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.  இன்றைக்கு கிராமப்புறம் அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ளது. விவசாயத்தை கைவிட்டு விட்டு கிராமத்தினர் நகரத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர். கட்டுமான தொழில் உள்ளிட்ட  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். ஆனால் இன்றைக்கு மோடி ஆட்சியில் கட்டுமானத் தொழி லும் பாதிக்கப்பட்டு வேலை தேடி நகர்ப்புறம் சென்ற அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். மீண்டும் கிராமத்திற்கே திரும்பும் நிலை. 

5 ஏக்கர் விவசாய நிலம் உள்ள விவசாயி இன்றைக்கு ரேஷனில் அரிசி வாங்கி சாப்பிடும் நிலை உள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை நாட்களை அதிகரித்தும், சம்பளத்தை உயர்த்தி தரவும் கேட்கிறோம். நலத் திட்டங்களை  மக்களுக்கு தருமாறு கேட்கிறோம். 100 நாள் வேலையை முடக்குகின்றனர். சம்பளத்தை குறைத்து வழங்குகின்றனர்.  வறட்சியான நேரத்தில் ஏரி, குளங்களை தூர்வாரி, மக்களுக்கும் வேலை தந்து தூர்வாரும் பணியைச் செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. காவிரியில் தண்ணீர் வந்த பிறகு, பருவமழை தொடங்கிய பிறகு எதற்காக தூர்வாரும் பணி. தண்ணீரை சேமிக்க வழி இல்லை. காவிரியில் வரும் தண்ணீரும், மழை நீரும் வீணாக கடலுக்கு செல்கிறது. நேரத்தில் தூர்வாரும் பணியை செய்ய இந்த அரசுக்கு மனமில்லை. 

ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி வரிச் சலுகையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கி யுள்ளார். இந்த வரிச் சலுகை யாருக்கு. நமக்கு இல்லை. விவசாயிகளுக்கு இல்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு இல்லை. இந்த சலுகை அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு. இது யாருடைய பணம். நம்முடைய வரிப் பணம். விவசாயிகளின் கண்ணில் சுண்ணாம்பையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்ணில் வெண்ணெய்யும் தடவுகிறது மத்திய அரசு.  மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங் களை சீர்குலைத்து அவற்றை படிப்படியாக தனி யார் மயமாக்க முயற்சி செய்கிறது. ரயில்வே, பிஎஸ்என்எல், பெல் போன்ற நிறுவனங்களை யும் படிப்படியாக தனியார் மயமாக்க முயற்சி செய்கிறது. மக்கள் விழிப்புடன் செயல்பட்டு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சதியை முறியடிக்க வேண்டும்” என்றார்

;